தமிழ்நாடு அறிவியல் இயக்க புத்தக அரங்கு திறப்பு
ஓசூர், ஜன. 2-
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராமநாயக்கன் ஏரிக்கரையில் உள்ள ஆவின் பாலகம் முன், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில்,
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, புத்தகங்களோடு புத்தாண்டை கொண்டாடுவோம் என்ற பெயரில், புத்தக அரங்கு அமைக்கப்பட்டு,
தள்ளுபடியில் புத்தக விற்பனை நேற்று நடந்தது.
ஓசூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நீலகண்டன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர் சண்முகம்
வரவேற்றார். செயலாளர் பாரதிதாசன், அகஸ்தியர் வீர சிலம்பம் நிறுவனர் பிரேம்குமார் முன்னிலை வகித்தனர்.
ஓசூர் மேயர் சத்யா, புத்தக அரங்கை திறந்து வைக்க, ஒய்.வி.எஸ்., ரெட்டி புத்தக விற்பனையை துவக்கி வைத்தார்.
மாலையில் பள்ளி மாணவ, மாணவியர் டெலஸ்கோப் மூலம் பல்வேறு கோள்களை பார்த்தனர்.
வரும், 2025ம் ஆண்டு ஓசூர் புத்தக திருவிழாவில் புத்தகம்
வாங்குவதற்காக பணத்தை சேமிக்கும் வகையில், சேமிப்பு பைகளை ஆடிட்டர் பாலசுந்தரம் மாணவ, மாணவியருக்கு வழங்கினார்.