ஹெரிடேஜ் வித்யாலயா பள்ளி ஆண்டு விழா


வாழப்பாடி, ஜன. 2-
வாழப்பாடி அருகே கவர்கல்பட்டி ஹெரிடேஜ் வித்யாலயா பள்ளியில், 11ம் ஆண்டு விழா நடந்தது. பள்ளி தாளாளர் பெருமாள் தலைமை வகித்தார். துணைத்தலைவர் கண்ணன் வரவேற்றார். முதல்வர் சக்திவேல் ஆண்டறிக்கை வாசித்தார்.
லட்சுமி புற்றுநோய் ஆய்வு மருத்துவமனை இயக்குனர் சதீஷ்பாபு, பெங்களூரு சைதன்யா இன்பினிட்டி லேர்ன் நிறுவன கல்வித்துறை தலைவர் பிரகாஷ்ராம், பல்வேறு கலைத்திறன், தனித்திறன் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர். தொடர்ந்து மாணவ, -மாணவியரின் கலை, சாகச நிகழ்ச்சிகள் நடந்தன. விழா ஏற்பாடுகளை பள்ளி அறக்கட்டளை தலைவர் முத்தாயி, செயலர் பூர்ணிமா, ஆசிரியர் குழுவினர் செய்திருந்தனர். நிரஞ்சனா உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement