பறிமுதல் வாகனங்கள் நாளை ஏலம்


சேலம், ஜன. 2-
சேலம் மாநகர போலீஸ்
கமிஷனர் அலுவலக அறிக்கை:
சேலம் மாநகரில் மது விலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட நான்கு சக்கர வாகனம் - 3, மூன்று சக்கர வாகனம் - 3, இருசக்கர வாகனம் - 74 ஆகியவை, லைன்மேட்டில் உள்ள சேலம் மாநகர ஆயுதப்படை மைதானத்தில் ஜன., 3ல்(நாளை) ஏலம் விடப்படும். ஏலம் எடுப்போர், இருசக்கர வாகனங்களுக்கு, 5,000; மூன்று சக்கர வாகனங்களுக்கு, 7,000; நான்கு சக்கர வாகனங்களுக்கு, 10,000 ரூபாய் முன்பணம் செலுத்த வேண்டும்.
ஏல நாள் காலை, 9:00 முதல், 10:00 மணிக்குள், ஆயுதப்படை மைதானத்தில், பணம் ரசீது பெற்றுக்கொள்ளலாம், முன்பணம் செலுத்தியோர் மட்டும் ஏலத்தில் பங்கேற்க அனுமதி. ஏலம் எடுத்ததும், அதற்கான தொகை, ஜி.எஸ்.டி.,யுடன் செலுத்தி, வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம். விபரம் பெற, 'தலைமையிடத்து துணை கமிஷனர், மதுவிலக்கு பிரிவு, சேலம் மாநகரம்' அலுவலகத்தை நேரடியாக அணுகலாம். 0427 - 2431200, 9498102546 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement