கைதிகள் கொண்டாட்டம்


சேலம், ஜன. 2-
ஆங்கில புத்தாண்டையொட்டி, சேலம் மத்திய சிறையில், 'பருவங்களில் உண்மையில் மலர்ந்தது நட்பா? காதலா?' தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. குழந்தை திருமணங்களை தடுக்கும்படி, இப்பட்டிமன்றம் எடுத்தாளப்பட்டது. தொடர்ந்து, சிறப்பாக பணிபுரிந்த, 40 அலுவலர்கள், போலீசாரின் பணிகளை பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, 'மீண்டும் சிறைக்கு வரமாட்டேன். மீதி காலத்தை நல்ல முறையில் குடும்பத்துடன் வாழ்வேன்' என, கைதிகள் உறுதிமொழி எடுத்தனர். பின், 'கேக்' வெட்டி கைதிகளுக்கு வழங்கப்பட்டது. பின் கைதிகள், சினிமா பாடல்களை பாடி திறமையை வெளிப்படுத்தினர். சிறப்பாக பாடிய கைதிகளுக்கு, கண்காணிப்பாளர் வினோத், பரிசு வழங்கினார். மன இயல் நிபுணர் வைஷ்ணவி உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement