குழாய் சீரமைக்க தோண்டிய பள்ளம் மூடப்படுமா?
நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, நந்திவரம் 14வது வார்டுக்கு உட்பட்ட பழைய போலீஸ் குடியிருப்பு வளாகம் அருகில், நகராட்சி சார்பில் குடிநீர் குழாயை பழுது பார்க்க, சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடந்தன.
பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, அந்த பள்ளத்தை மூடாமல் விட்டுச் சென்றுள்ளனர்.
ஒரு வாரத்திற்கு மேலாகியும் பள்ளங்களை முறையாக மூடாததால், இப்பகுதி வழியாகச் செல்லும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அச்சத்துடன் செல்கின்றனர். மேலும், அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வயதானவர்கள், கர்ப்பிணியர் அதிகமாக இந்த சாலையில் சென்று வருகின்றனர். மாலை நேரத்தில் இப்பகுதியில் தெரு விளக்கு இல்லாததால், யாராவது பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, தோண்டிய பள்ளத்தை மூடி, பொதுமக்கள் பாதுகாப்பாக செல்ல, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.