ஆத்துார் ஜி.ஹெச்.,ல் பிறந்த 8 குழந்தைகள்

ஆத்துார் ஜி.ஹெச்.,ல் பிறந்த 8 குழந்தைகள்

ஆத்துார், ஜன. 2-
ஆங்கில புத்தாண்டான நேற்று, ஆத்துார் அரசு மருத்துவமனையில், இரு பெண் உள்பட, 8 குழந்தைகள் பிறந்தன. அவர்களை பெற்றெடுத்த தாய்மார்கள், ஆங்கில புத்தாண்டு பரிசாக பெற்ற, குழந்தைகளை கடவுள் கொடுத்திருப்பதாக மகிழ்ச்சி அடைந்தனர். மருத்துவமனை ஊழியர்கள், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் இனிப்புகளை கொடுத்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Advertisement