திரவுபதி அம்மனுக்கு பால் குடம் அபிஷேகம்

திருத்தணி:திருத்தணி காந்திரோடு பகுதியில், திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று, ஆங்கில புத்தாண்டையொட்டி, 108 பால்குட அபிஷேகம் நடந்தது.

முன்னதாக, முருகப்பா நகர், நாகாலம்மன் கோவில் அருகில் இருந்து மங்கள வாத்தியம் முழங்க பெண்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பால் குடங்கள் சுமந்து ஊர்வலமாக வந்தனர்.

தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. கோவிலில், வீர பாஞ்சாலி அம்மன் குழுவினர்களால் அன்னதானமும், இரவு அம்மன் ஊஞ்சல் உற்சவமும் நடந்தது.

Advertisement