சாலையோரம் தடுப்பு அமைப்பு வாகன ஓட்டிகள் நிம்மதி
அச்சிறுபாக்கம், தொழுப்பேடு பகுதியில், சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, ஒரத்தி வழியாக வந்தவாசி, காஞ்சிபுரம் வரை செல்லும், மாநில நெடுஞ்சாலை உள்ளது.
இதில், கீழ் அத்திவாக்கம் அடுத்த பொறங்கால் பகுதியிலுள்ள ஏரியிலிருந்து உபரி நீர் செல்லும் கால்வாய், இந்த சாலையில் உள்ள பாலத்தைக் கடந்து செல்கிறது.
இந்த பாலத்தில், தடுப்புச் சுவர் இல்லாமல், திறந்தவெளியில் ஆபத்தான வகையில் இருந்து வந்தது.
இதனால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, இந்த பாலப் பகுதியில் தடுப்புச்சுவர் அமைத்து, இரவில் ஒளிரும் எதிரொலிப்பான் 'ஸ்டிக்கர்'கள் பொருத்த, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையஅடுத்து, அச்சிறுபாக்கம் மாநில நெடுஞ்சாலைத் துறையினர், இந்த பாலப் பகுதியில் சிமென்ட் கான்கிரீட் தடுப்பு கட்டைகள் அமைத்து உள்ளனர். இதனால், வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்துள்ளனர்.