சண்டை சேவல் விற்பனை விறுவிறு

இடைப்பாடி: காணும் பொங்கலன்று, தமிழகம், தென் மாநிலங்களின் சில பகு-திகளில் சேவல் சண்டை நடத்தப்படுகிறது. பல இடங்களில் போலீஸ் அனுமதி இல்லாமலும், சில இடங்களில் போலீசின் மறைமுக ஆதரவோடும், தமிழகத்தின் சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்-டங்கள், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் சேவல் சூதாட்டம் நடக்கிறது.


சேலம் மாவட்டத்தில் மயில், கீரி, பேய் கருப்பு, கொக்கு வெள்ளை, காகபேடு, செங்கருப்பு, வெள்ளை, சுள்ளி உள்ளிட்ட ரகங்களில் சண்டை சேவல்கள் உள்ளன. மற்ற இடங்களில் வளர்க்கப்படும் சேவல்களை விட சேலம் மாவட்டத்தில் வளர்க்-கப்படுபவை அதிதீவிரமாக சண்டையிடும் வழக்கம் கொண்டது. அதனால் சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் நேற்று கூடிய சந்தைக்கு, 500க்கும் மேற்பட்ட சண்டை சேவல்கள் கொண்டு வரப்பட்டன. கடப்பா, மைசூரு, பெங்களூரு, தர்மபுரி, சேலம், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 50க்கும் மேற்பட்ட வியா-பாரிகளும் வந்தனர். சண்டை சேவல், 2,000 முதல், 15,000 ரூபாய் வரை, சண்டையிடும் தரத்துக்கு ஏற்ப விற்பனையானது. இதன்மூலம், 10 லட்சம் ரூபாய் சண்டை சேவல்கள் விற்பனை நடந்ததாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement