சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசுரம்

பெண்ணாடம்: தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி, பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

விருத்தாசலம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன் தலைமை தாங்கி, வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளுக்கு வழங்கினார்.

அப்போது, வாகனங்களின் முகப்பு விளக்குகளில், கறுப்பு வர்ணம் பூசி, வெள்ளை மற்றும் சிகப்பு நிற பிரதிபலிப்பான் பொருத்தப்பட வேண்டும். இருசக்கர வாகனத்தை ஹெல்மட் அணிந்து ஓட்ட வேண்டும். சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்ட வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். டிரைவர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Advertisement