மேட்டூர் அணை நீர் திறப்பு 10,000 கன அடியாக அதிகரிப்பு
மேட்டூர்: மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கடந்த ஆண்டில், டிச., 31ல், அணை, 3ம் முறை நிரம்பியது. தொடர்ந்து வினாடிக்கு, 500 கனஅடியாக இருந்த நீர்திறப்பு, 1,000 கனஅடி-யாக அதிகரிக்கப்பட்டது.டெல்டா சாகுபடிக்கு நீர் தேவை அதிக-ரித்ததால், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு நீர்திறப்பு வினாடிக்கு, 1,500 கன
அடியாக அதிகரிக்கப்பட்டது.
தொடர்ந்து நேற்று மாலை, 4:00 மணிக்கு நீர்திறப்பு வினாடிக்கு, 5,000 கனஅடியாக அதிகரிக்கப்-பட்ட நிலையில், இரவு, 8:00 மணிக்கு, 10,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. நேற்று முன்தினம் வினாடிக்கு, 1,791 கன அடியாக இருந்த அணை நீர்வரத்து, நேற்று, 1,871 கனஅடியாக சற்று அதிகரித்தது. நீர்மட்டம், 120 அடி, நீர் இருப்பு, 93.47 டி.எம்.சி., யாக இருந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement