காணாமல் போன பள்ளி மாணவி ஸ்டேஷன் முன் குவிந்த குடும்பத்தினர்
ஓமலுார்: சேலம் மாவட்டம் ஓமலுாரை சேர்ந்த, 14 வயது சிறுமி, அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் முதல், அவரை காணவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பத்-தினர்,
அன்று மாலை, ஓமலுார் மகளிர் போலீசில் புகார் அளித்-தனர். அப்போது சிறுமியின் புகைப்படம், மொபைல் நம்பர் உள்-ளிட்டவற்றை, போலீசாரிடம் வழங்கினர். இரவு என்பதால், காலையில் வாருங்கள் என, போலீசார் தெரிவித்துள்ளனர். அதன்-படி நேற்று காலை, குடும்பத்தினர் சென்று நீண்ட நேரம் ஸ்டேஷன் முன் காத்திருந்தனர். தொடர்ந்து போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என, சேலம் கலெக்டர் அலுவலகம், சமூக நலத்துறையினரிடம் புகார் தெரிவித்தனர். பின் ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர்கள் ஆதரவுடன், போலீஸ் ஸ்டேஷன் முன் குவிந்தனர். இதையடுத்து மதியம், 1:00 மணிக்கு மேல் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement