'சி.பி.ஐ., விசாரணை கேட்பதில் நியாயமில்லை' இ.பி.எஸ்.,க்கு அமைச்சர் முத்துசாமி விளக்கம்

ஈரோடு: ''அண்ணா பல்கலை மாணவி சம்பவத்துக்கு, சி.பி.ஐ., விசா-ரணை வேண்டுமென இ.பி.எஸ்., கேட்பதில் நியாயமில்லை,'' என, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கூறினார்.


ஈரோட்டில் நேற்று அவர் கூறியதாவது: அண்ணா பல்கலை மாணவி பலாத்கார பிரச்னையில் அரசுக்கு எதிராக உள்ள கட்சிகள் ஒன்றிணைந்து பேசுகின்றனர். எது தப்பு, எது சரி என கண்டு
பிடித்து, கண்டுபிடித்து பேசுகின்றனர். இதில் ஆய்வு செய்வது தவறாக இருக்கும். அரசு மீது எந்த குற்றமும் சாட்ட முடியாது. இச்சம்பவத்துக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு பொறுப்பு என யார் கூறினாலும், அது தவறு. எந்த இடத்திலும் தொய்வு ஏற்படவில்லை.
பல விஷயங்களுக்கு எதிர் கட்சி தலைவர் சி.பி.ஐ., விசாரணை கேட்டார். எதில் சி.பி.ஐ., வர வேண்டும் என முறை உள்ளது. இங்குள்ள காவல் துறை தொய்வாக இருந்தால் கேட்கலாம். சில மணி நேரத்தில் தொடர்புடையவரை கைது செய்துள்ளனர். பாகு-பாடின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பிரச்னைக்கு இ.பி.எஸ்., தரப்பில் சி.பி.ஐ., விசாரணை கேட்பதில் எந்த வகை-யிலும் நியாயமில்லை.
இப்பிரச்னையை கண்டித்து நடத்தப்படும் போராட்டங்
களுக்கு எந்தெந்த இடங்களில் அனுமதி தர வேண்டுமோ அங்கு தரப்பட்டுள்ளது.
கடந்த, 20 ஆண்டாக எங்கெங்கு போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தலாம், என அரசே வழி வகுத்துள்ளது. நாங்கள் எதிர் கட்சி-யாக இருந்தபோதும், அனுமதி மறுத்தால் போராட்டத்தை தவிர்த்து விதியை கடைபிடித்துள்ளோம். அச்சம்பவத்தில் கைதா-னவர் தி.மு.க.,காரர் இல்லை. ஒருவர் உறுப்பினராவதற்கும், பொறுப்பில் இருப்பதற்கும் வேறுபாடு உள்ளது. சில அமைச்-சர்கள் அவர் வீட்டுக்கு சென்று சாப்பிட்டுள்ளனர் என கூறும்-போது, அ.தி.மு.க., தரப்பில் யார், யாரெல்லாம் சாப்பிட்டுள்-ளனர் எனவும் கண்டுபிடித்து சொல்லலாம்.
இப்பிரச்னை பற்றி நீதிபதிகள் கூட, 'போட்டோ உள்ளதால், ஒருவரை ஒரு விதமாக எடுத்து கொள்ள முடியாது. நாங்கள் செல்லும் இடங்களில் கூட எங்களுடன் போட்டோ எடுத்து கொள்கின்றனர். தவிர்க்க முடியாமல் உள்ளது' என கூறி உள்-ளனர்.
விதிமுறை மீறி கட்டப்படும் கட்டடங்களை வரைமுறைப்
படுத்தவும், நடவடிக்கை எடுக்கவும் உச்சநீதிமன்றத்தின் பல உத்-தரவுகள் நடைமுறையில் உள்ளன. அந்த அடிப்படையில் சில கட்டடங்கள் அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Advertisement