11 ஆண்டுகளாக பராமரிப்பு பணிகள் இல்லை கரூர் மாயனுார் கதவணை ஷட்டர்கள் சேதம்
கரூர்: கடந்த, 11 ஆண்டுகளுக்கு மேலாக கரூர் மாயனுார் கதவ-ணையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளாததால், ஷட்டர்கள் சேத-மடைந்து வருகின்றன.
கரூர் மாவட்டம், மாயனுாரில் காவிரி ஆற்றின் குறுக்கே, 1,233 மீட்டர் நீளத்திற்கு, 98 ஷட்டர்களுடன் கட்டப்பட்ட கதவணை, 2014 முதல் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதில், 4.63 லட்சம் கனஅடி வெள்ள நீர் வெளியேறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கதவணை யில், 1.05 டி.எம்.சி., தண்ணீர் தேக்கி வைக்க முடியும். கடந்த, 2015, 2018, 2019ம் ஆண்டுகளில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெ-ருக்கு ஏற்பட்ட போது, அதிகபட்சமாக, 2.47 லட்சம் கனஅடி தண்ணீர் கதவணை மூலம் வெளியேற்றப்பட்டது. வெள்ளப்பெ-ருக்கு காரணமாக, கதவணை யின் அடிதள கட்டுமானங்கள் சேதம் அடைந்தன. இதையடுத்து, கதவணையில் பெரிய பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில், 2022 பிப்ரவரியில், 185.26 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைப்பு பணி மேற்கொள்-ளப்பட்டது. அப்போது கூட, ஷட்டர் சீரமைப்பு பணி செய்ய-வில்லை.
இது குறித்து, நீர்வளத்துறை பொறியாளர்கள் கூறியதாவது:
மாயனுார் கதவணையில், பல முறை பராமரிப்பு பணி மேற்-கொள்ளப்பட்டுள்ளது. அதில், கட்டுமானத்திற்கு மட்டுமே சீர-மைப்பு பணி செய்யப்பட்டுள்ளது. அவ்வப்போது, அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போதும், மூடும் போதும் பிரச்னை ஏற்படும். அப்போது மட்டுமே பழுது நீக்கும் பணி செய்யப்படு-கிறது.
ஐந்து ஆண்டுக்கு ஒரு முறையாவது, ஷட்டர்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இங்கு, 11 ஆண்டுகளுக்கு மேலாக ஷட்டர்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட-வில்லை. அணையில் நீர் தேக்கி வைக்கும் சமயத்தில், ஷட்டரில் நீர் கசிவு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறும். கடந்த ஜூலை, 24ல் சென்னை தரக்கட்டுப்பாட்டு பிரிவு தலைமை செயலாளர் சுந்தர்-ராஜன் தலைமையில், ஷட்டர், கதவணை ஆகியவற்றை அதிகாரி
கள் ஆய்வு மேற்கொண்டனர். இருந்தபோதும், எந்த பராமரிப்பு பணியும் தொடங்கவில்லை. பல ஷட்டர்கள் துருப்பிடித்து பலவீ-னமான உள்ளதால், எப்போது வேண்டுமானாலும் உடையும் அபாயம் உள்ளது. உடனடியாக, ஷட்டர்களின் ஷீல்டுகளை மாற்றி அமைக்கவும், ரப்பர் சீல்டுகளை புதுப்பித்தும், சேதமான இருப்பு கயிறுகளை மாற்றியும், துருப்
பிடிக்காத பெயின்ட் பணிகளை செய்ய வேண்டும். இவ்வாறு கூறினர்.
இது குறித்து, குளித்தலை நீர்வள
ஆதார அமைப்பின், ஆற்று பாதுகாப்பு உபகோட்ட உதவி செயற்-பொறியாளர் கோபிகிருஷ்ணன் கூறுகையில், ''மாயனுார் கதவ-ணையில் உள்ள ஷட்டரில் நீர் கசிவு குறித்து, நீர்வளத்துறை அதி-காரிகள் குழு ஆய்வு மேற்கொண்டது. அவர்கள், அளித்த அறிக்-கையின் அடிப்படையில், பராமரிப்பு பணி மேற்கொள்ள திட்ட மதிப்பீடு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசு நிதி ஒதுக்கீடு செய்தவுடன் பணிகள் தொடங்கப்படும்,'' என்றார்.