மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது; தப்ப முயன்றபோது கால் உடைந்தது..
ஓசூர்: ஓசூரில், 80 வயது மூதாட்டியை பைக்கில் அழைத்துசென்று பலாத்காரம் செய்தவரை போலீசார் கைது செய்தனர். போலீசா-ரிடம் இருந்து தப்பியோட முயன்றபோது கீழே விழுந்ததில் அவ-ரது வலது கால் முறிந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகிலுள்ள பகுதியை சேர்ந்தவர், 80 வயது மூதாட்டி. ஆதரவற்ற இவர், ஓசூர் பஸ் ஸ்டாண்டில் தங்கி யாசகம் பெற்று பிழைப்பு நடத்தியுள்ளார். கடந்த, டிச.,30 இரவு மூதாட்டியை அவரது வீட்டில் விடுவதாக கூறி, வாலிபர் ஒருவர் பைக்கில் அழைத்து சென்று பேரண்டப்-பள்ளி வனப்பகுதி அருகே பாலியல் பலாத்காரம் செய்தார். மூதாட்டியை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து வழக்குபதிந்து ஓசூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். 'சிசிடிவி' காட்சிகள் மூலம்,மூதாட்டியை அழைத்து சென்றது, பாகலூர் அடுத்த உளியாளத்தை சேர்ந்த வேன் டிரைவர் லட்சுமணன், 35, என்பது தெரிந்தது. நேற்று காலை ஓசூர், ராயக்-கோட்டை சாலை, அசோக்பில்லர் அருகே டூவீலரில் சென்ற லட்-சுமணனை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தப்பி ஓட முயன்ற போது தடுமாறி விழுந்த லட்சுமணனின் வலது கால் முறிந்தது. அவரை சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்-துவமனையில் சேர்த்தனர். விசாரணையில் அவர் மூதாட்டியை பைக்கில் அழைத்து சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்-டதை ஒப்புக்கொண்டார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசா-ரித்து வருகின்றனர்.