கால்நடை மருத்துவ கல்லுாரி மாணவி மத்திய அரசின் அர்-ஜுனா விருதுக்கு தேர்வு
நாமக்கல்: நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி மாணவி துளசிமதி, மத்திய அரசின் அர்ஜுனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி முருகேசன், விஜி தம்-பதியரின் மகள் துளசிமதி. நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுா-ரியில், மூன்றாமாண்டு படித்து வருகிறார். கடந்தாண்டு பாரிசில் நடந்த சர்வதேச பாராலிம்பிக்கில், பாட்மின்டன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். இவரை பாராட்டி முதல்வர் ஸ்டாலின் பரிசு வழங்கினார். இந்நிலையில், மத்திய அரசின் விளையாட்டுத்துறை அமைச்சகத்தால், துளசிமதி அர்ஜுனா விரு-துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். டில்லியில் வரும், 17ல் நடக்கும் விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துளசிமதிக்கு அர்-ஜுனா விருதை வழங்க உள்ளார்.இதுகுறித்து, துளசிமதி கூறியதாவது:
மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த நான், தனியார் பயிற்சி மையத்திற்கு சென்று பயிற்சி பெற முடியாமல் இருந்தேன். என் தந்தையின் ஊக்குவிப்பால், நானாகவே பயிற்சி பெற்று, பாட்மின்டன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்-றுள்ளேன். தற்போது, மத்திய அரசின் உயரிய விருதான அர்ஜுனா விருதுக்கு தகுதி பெற்றுள்ளேன். இந்த விருதை என் தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.