இளைஞர் கொலை: 5 பேர் கைது
ப.வேலுார்: ப.வேலுார் தாலுகா, வேலகவுண்டம்பட்டி அடுத்த சிங்கிலி-பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சய், 22. கடந்த, 1ல், வேலக-வுண்டம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார். அப்-போது, சிலர் அவரை சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்தி-லேயே உயிரிழந்தார். வேலகவுண்டம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், தனிப்படை அமைத்து, கொலையாளிகளை தேடி வந்தனர்.
இதற்கிடையில், நேற்று முன்தினம் சந்தேகத்தின் பேரில், 5 பேரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், புத்துார் கிழக்கு தெரு, அருந்ததியர் காலனியை சேர்ந்த சண்முகம் மகன் சூர்யா, 26, வேலகவுண்டம்பட்டி பெரு-காம்பாளையம், அருந்ததியர் தெருவை சேர்ந்த, 17 வயது சிறுவன், முதலைப்பட்டி அடுத்த செல்லிபாளையம் தினேஷ், 32, சிங்கிலிபட்டி சரவணன் மகன் சஞ்சய், 19, மரூர்பட்டி, கந்-துக்கார தோட்டத்தை சேர்ந்த கட்டட மேஸ்திரி சங்கர், 39 ஆகியோர், சஞ்சயை கொலை செய்தது தெரியவந்தது. அவர்-களை கைது செய்த போலீசார், 17 வயது சிறுவனை, சேலம் கூர்-நோக்கு இல்லத்திலும், மற்ற, 4 பேரை, சேலம் மத்திய சிறை-யிலும் அடைத்தனர்.