நடப்பாண்டு இதுவரை 5.50 லட்சம் டன் நெல் கொள்முதல் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தகவல்
ஈரோடு: ''நடப்பாண்டில் இதுவரை, 5.50 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது,'' என, உணவுத்துறை அமைச்சர்
சக்கரபாணி பேசினார்.
தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர் சங்க பொதுக்குழு, இயந்-திர கண்காட்சி, கருத்தரங்கம் ஈரோட்டில் நேற்று துவங்கியது. தலைவர் துளசிமணி தலைமை வகித்தார். ஈரோடு மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் வர-வேற்றார். உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது:கடந்த, 2021ல் கொரோனா காலகட்டம். தி.மு.க., அரசு பொறுப்-பேற்றபோது கடும் நிதி நெருக்கடி. அப்போது, 17 லட்சம் டன் நெல் அரவை செய்ய முடியாமல் இருந்ததால், பொது வினியோக திட்டத்துக்கு வழங்குவதில் சிக்கல் எழுந்தது. மாநில அளவில், 377 அரிசி ஆலைகள் மட்டுமே இருந்ததால், மாதம், 6 லட்சம் டன் மட்டும் அரவை செய்ய இயன்றது. அப்போது திருப்பூரில் கூட்டம் நடத்தி இப்பகுதி அரிசி ஆலைகளில், முதல்வர் அனு-மதி பெற்று, தர பரிசோதனை கருவி பொருத்தி அரவை செய்தோம்.
அடுத்தாண்டுகளில் இப்
பிரச்னை வரக்கூடாது என்பதால், அரிசி ஆலைகளின் எண்-ணிக்கை உயர்த்த அரசு உதவியதால் தற்போது, 700 ஆலைகள், அரசின் பிரமாண்டமான, 21 நவீன அரிசி ஆலைகளும் இயங்கு-கின்றன. அனைத்து ஆலைகளிலும் தர நிர்ணய கருவி பொருத்-தப்பட்டதால், ரேஷனில் தரமான அரிசி கிடைக்கிறது.
தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்கும் முன் நெல் கொள்முதல் நிலை-யங்களில் குவிண்டால், 1,905 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்-பட்டது. குறைந்தபட்ச ஆதார விலை, ஊக்கத்தொகை உயர்வால் தற்போது சன்னரகம் குவிண்டால், 2,450 ரூபாய்க்கும், பொது ரகம், 2,405 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. அரவை ஆலைகளின் வேண்டுகோளை ஏற்று, புழுங்கல் அரிசி அரவை கூலி, 40 ரூபாய், பச்சரிசிக்கான கூலி, 25 ரூபாயாக உயர்த்தப்பட்-டுள்ளது.
மழை காலங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் சேதமடை-வதை தவிர்க்க, 223 கோடி ரூபாயில் நவீன நெல் சேமிப்பு குடோன் உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு, 2.80 லட்சம் டன் நெல் இருப்பு வைக்கலாம். மேலும், 40 இடங்களில் செமி குடோன் கட்டப்பட்டு வருகிறது.
கடந்த ஆட்சியில் டெல்டா மாவட்டம் உட்பட மாநில அளவில், 2,000 அரசின் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் (டி.பி.சி.,) செயல்பட்டன.
கடந்த, 2022-23ல், 4,011 டி.பி.சி., மூலம், 5.22 லட்சம் டன் நெல், 9,405 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. கடந்த, 2023-24ல், 3,609 டி.பி.சி., மூலம், 8,026 கோடி ரூபாயில், 4.96 லட்சம் டன் நெல் கொள்முதலானது. நடப்-பாண்டு இதுவரை, 1,235 டி.பி.சி.,க்கள் திறக்கப்பட்டு, 5.50 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், 75,000 விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். கடந்த காலங்-களில் டி.பி.சி., திறக்க துறை அனுமதி பெற வேண்டும். தற்-போது கலெக்டர் தலைமையிலான குழுவே முடிவு செய்து திறக்-கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.
செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், எம்.பி.,க்கள் பிரகாஷ், அந்-தியூர் செல்வராஜ், எம்.எல்.ஏ., சரஸ்வதி, கவுரவ தலைவர் சக்-திவேல். ஆலோசகர் ஜகதீசன், சங்க செயலாளர் பரணிதரன், பொருளாளர் ராம அருணாசலம், செயலாளர் சண்முக சுந்தரம், ஈரோடு பேட்டியா தலைவர் ராஜமாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ., பழனிச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.