கோழிப்பண்ணை தொழிலை பாதுகாக்க 'லைசென்ஸ்' முறை அமல்படுத்த 'நெக்' தலைவர் வேண்டுகோள்
நாமக்கல்: ''கோழிப்பண்ணை தொழிலை பாதுகாக்கவும், முறைப்படுத்தவும் புதிய பண்ணைகளுக்கு லைசென்ஸ் முறையை அமல்படுத்த வேண்டும். முட்டைக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்-ணயம் செய்ய, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (நெக்), நாமக்கல் மண்டல தலைவர் சிங்கராஜ் கூறினார்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின், நாமக்கல் மண்டலம் சார்பில், கோழிப்பண்ணையாளர்கள் சந்திப்பு கூட்டம், நாமக்-கல்லில் நேற்று நடந்தது. கூட்டத்தில், முட்டையின் பண்ணை கொள்முதல் விலையை நிர்ணயம் செய்வதில் உள்ள பிரச்னை, அதற்கான தீர்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.தொடர்ந்து, 'நெக்' தலைவர் சிங்கராஜ் கூறியதாவது:
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்யும் விலைக்கு மட்டுமே முட்டைகளை பண்ணைகளில் கொள்-முதல் செய்ய வேண்டும். மேலும், சந்தை நிலவரத்திற்கேற்ப, மைனஸ் மற்றும் மைனஸ் விலை இல்லாமல் முட்டை விலையை நிர்ணயம் செய்வது, பண்ணையாளர்களுக்கும், வியா-பாரி
களுக்கும் உகந்ததாக அமைந்துள்ளது.
பொதுவாக, உலக நாடுகள் பலவற்றில், அரசிடம் லைசென்ஸ் பெற்று அதனடிப்படையில் தான் கோழிப்பண்ணையை அமைத்து வருகின்றனர். ஆனால், நம் நாட்டில், புதிதாக கோழிப்-பண்ணை அமைப்பவர்கள் முறையான அனுமதி பெறாமல் தொடங்குகின்றனர். அதனால், முட்டை விலை நிர்ணயம் செய்வ-திலும், கோழிப்பண்ணைகள் மற்றும் கோழிகள் வளர்ப்பு ஆகிய-வற்றிலும் உரிய தரவுகளை அரசாங்கத்தாலும், கோழிப்பண்ணை-யாளர்களாலும் பராமரிக்க முடியவில்லை.
அதிக அளவிலான முட்டை உற்பத்தி, விலை நிர்ணயம் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. அனுமதி இல்லாத பண்-ணைகள் அதிகரிக்கும்போது, கோழிப்பண்ணையின் சுகாதாரம் பராமரிப்பதிலும் சவால் ஏற்படுகிறது. இந்த பிரச்னை ஏற்படு-வதை தவிர்க்கவும், கோழிப்பண்ணை தொழிலை பாதுகாக்கவும், புதிதாக கோழிப்பண்ணைகள் அமைப்பதற்கு, 'லைசென்ஸ்' முறையை, மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க செயலாளர் சுந்தர-ராஜன், அகில இந்திய முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்க செய-லாளர் வல்சன், முட்டை வியாபாரிகள் சங்க தலைவர் ஆனந்தன் உள்பட பலர் பங்கேற்றனர்.