டாக்டர் உட்பட 4 பேரிடம் ரூ. 4.51 லட்சம் மோசடி

புதுச்சேரி: டாக்டர் உட்பட 4 பேரிடம் 4.51 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவ கல்லுாரி மருத்துவர் சதீஷ்குரு வில்லா. இவரை 'வாட்ஸ் ஆப்' மூலம், தொடர்பு கொண்ட நபர், பங்கு சந்தையில், முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என பேசினார். அந்த நபர் அனுப்பிய லிங் மூலம், மருத்துவர் ரூ. 2 லட்சம் ரூபாயை அனுப்பி ஏமாந்தார்.

ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த விஜயகுமார்ராஜன் என்பவரிடம் பேசிய நபரை நம்பி, பங்கு சந்தையில் 2 லட்சம் ரூபாயை முதலீடு செய்து, ஏமாந்தார்.

தொடர்ந்து, வேல்ராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ், இவருக்கு தெரியாமல், வங்கி கணக்கில் இருந்து 41 ஆயிரம் ரூபாயை மர்ம கும்பல் எடுத்தனர். எல்லைப்பிள்ளைச்சாவடி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது வங்கி கணக்கில் இருந்து பயோமெட்ரிக் மூலம் 10 ஆயிரத்தை மர்ம நபர் எடுத்துள்ளனர்.

இதுகுறித்து, 4 பேர் கொடுத்த புகார்களின் பேரில், சைபர்கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.

Advertisement