மகளுக்கு பாலியல் தொந்தரவு தந்தைக்கு 5 ஆண்டு சிறை

தேனி:தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் 16 வயது மகளை பாலியல் தொந்தரவு செய்த 55 வயது தந்தைக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை , ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உத்தமபாளையம் 50 வயது பெண். இவரது 55 வயது கணவர் கூலி வேலை செய்கிறார். இத்தம்பதிக்கு 16 வயதில் மகள் உள்ளார். 10ம் வகுப்பு படித்தார். 2021 ஏப்ரலில் மகள் இரவில் துாங்கும் போது தந்தை பாலியல் தொந்தரவு செய்தார்.

இதனை தாயிடம் சிறுமி தெரிவித்தார். இதுகுறித்து தட்டிக்கேட்டமனைவியை கணவர் தாக்கினார். இதனால் தாய் அருகில் உள்ள தனது தங்கையின் வீட்டிற்கு மகளை அழைத்துச் சென்று தங்கினார்.

2021 மே 21ல் அங்கு சென்ற கணவர், மகளுக்கு நல்ல இடத்தில் மாப்பிள்ளை பார்த்துள்ளேன். வீட்டிற்கு வருமாறு மனைவியை அழைத்துள்ளார். பயத்தால் செல்ல மறுத்த மனைவி, மகளை தாக்கியுள்ளார். இதுபற்றி சிறுமியின் தாய், சைல்டுலைன் எண்ணில் புகார் அளித்தார். அதிகாரிகள் விசாரணையில், தந்தை மகளை பாலியல் தொந்தரவு செய்தது தெரிந்தது. இதையடுத்து சிறுமியின் தந்தை மீது நடவடிக்கை எடுக்க உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீசாருக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு உத்தரவிட்டது.

அவரை உத்தமபாளையம் மகளிர் போலீசார்போக்சோ வழக்கில் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் சிறுமி தந்தைக்கு ஐந்தாண்டுகள் சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார்.

Advertisement