தேசிய கீதம் பாடல் பிரச்னை சட்டம் என்ன சொல்கிறது

1

கோவை:தமிழக சட்டசபையில், தேசிய கீதம் பாடல் தொடர்பாக அரசுக்கும், கவர்னர் ரவிக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், தேசிய கீதம் பாடுவது தொடர்பாக, இந்திய அரசியலமைப்பு சட்டம் என்ன சொல்வது குறித்து, கோவை மூத்த வக்கீல் ஆர்.சண்முகம் கூறியதாவது:

ஒரு மாநிலத்தின்கவர்னர், முக்கிய நிகழ்வில் பங்கேற்கும் போது, தேசிய கீதம் பாட வேண்டுமா என்பது குறித்து, அரசியல் சாசன சட்டப்பிரிவு '51 ஏ'வில் மிகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள குடிமகன் அனைவரும் அரசியல் சாசனம், தேசிய கொடி மற்றும் தேசிய கீதம் ஆகியவற்றை கடைப்பிடிப்பது அடிப்படை கடமையாகும்.

சட்டம் - 1971, பிரிவு 3ன் கீழ், தேசிய கீதம் பாடுவதை வேண்டுமென்றே தடுக்கும் எவர் ஒருவருக்கும், அவ்வாறு பாடும் சபைக்கு இடையூறு விளைவிப்பவருக்கும், மூன்றாண்டு வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று, சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, உள்துறை அமைச்சகம், அனைத்து மாநிலத்திற்கும், 2018ல் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், கவர்னர் தன் மாநிலத்தில் நடக்கும் அரசு விழாவிற்கு வருகை தரும் போதும், விழா முடிந்து வெளியேறும் போதும், தேசிய கீதம் பாட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு, வக்கீல் ஆர். சண்முகம் கூறினார்.

Advertisement