மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் : சட்டசபை ஒத்திவைப்பு

சென்னை:முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட, மூன்று பேரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

2ம் நாளான நேற்று காலை 9:30 மணிக்கு சபை மீண்டும் கூடியது. சமீபத்தில் மறைந்த மேல் மலையனுார் முன்னாள் எம்.எல்.ஏ., தமிழ்மொழி ராஜதத்தனுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அனைவரும் இரண்டு நிமிடம் எழுந்து நின்று, மவுன அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் மன்மோகன்சிங், ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ., இளங்கோவன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இருவருக்கும் சபாநாயகர் அப்பாவு புகழாரம் சூட்டினார். அனைவரும் இரண்டு நிமிடம் எழுந்து நின்று, மவுன அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, 5 நிமிடங்களில் சபை நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தன.

காய்ச்சல் காரணமாக, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, நேற்றைய சபை நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை.

Advertisement