துரைமுருகன் மகன் கல்லுாரியில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை
திருவண்ணாமலை:வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த கிறிஸ்டியான் பேட்டையில், தி.மு.க., அமைச்சர் துரைமுருகன் மகனும், எம்.பி.,யுமான கதிர் ஆனந்திற்கு சொந்தமான, கிங்ஸ்டன் பொறியியல் கல்லுாரியில், ஜன.,3ம் தேதி காலை 7:00 மணி முதல், அமலாக்கத்துறை அதிகாரிகள் 15க்கும் மேற்பட்டோர் சோதனையில் ஈடுபட்டனர்.
அன்றிரவு, கல்லுாரி பணம் வைக்கும் அறையில் கட்டு கட்டாக பல லட்சக்கணக்கான ரூபாயை கைப்பற்றினர்.
பின், ஜன., 5ம் தேதி அதிகாலை 2:40 மணியுடன், 44 மணி நேரமாக நடத்தப்பட்ட சோதனையை முடித்து புறப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று காலை 7:00 மணி முதல், 10 பேர் கொண்ட அமலாக்கத்துறை குழுவினர் மீண்டும் சோதனையை துவக்கி உள்ளனர்.
ஏற்கனவே நடந்த ஆய்வின்போது, ஒரு கம்ப்யூட்டர் ஆன் ஆகாததால், அதை ஆய்வுசெய்ய கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் வாயிலாக ஆய்வு செய்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement