கல்வி நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

சென்னை:'உயர் கல்வி நிறுவனங்கள், பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும்' என, அமைச்சர் கோவி.செழியன் அறிவுறுத்தி உள்ளார்.

பல்கலை பதிவாளர்களுடனான, ஆலோசனை கூட்டத்தில், அவர் கூறியதாவது:

* சென்னை அண்ணா பல்கலையில் நடந்தது போன்ற விரும்பத்தகாத சம்பவம், வேறு எங்கும் நடக்காமல் இருக்க, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்

* கல்வி நிறுவனங்களில், இரவு நேரங்களில் அனைத்து பகுதிகளிலும், மின் விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்

* கல்வி நிறுவன வளாகத்துக்குள் வருவோர், வெளியில் செல்வோர் குறித்த விபரங்களை, பதிவேடில் பராமரிக்க வேண்டும்

*வளாகத்துக்குள் மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும், அடையாள அட்டை அணிந்து இருக்க வேண்டும்

* அவசர காலங்களில் உதவ, காவல் துறை உருவாக்கி உள்ள, 'காவல் உதவி' செயலி குறித்து, மாணவர்கள், மாணவியருக்கு எடுத்துரைக்க வேண்டும்

* கல்வி நிறுவனங்களில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு அலுவலர்கள் இரவு நேரத்தில், தொடர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்

* பாதுகாப்பு நடவடிக்கைகளில், மாணவ, மாணவியரின் ஆலோசனையை பெற்று, அதன் அடிப்படையிலும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement