உரிமம் பெற்ற துப்பாக்கியை ஒப்படைக்க அறிவுறுத்தல்



ஈரோடு, :ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தை விதி நேற்று மதியம் அமலான நிலையில், உரிமதாரர்களிடம் இருந்து துப்பாக்கிகளை பெறும் நடவடிக்கையை போலீசார்
மேற்கொண்டுள்ளனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது: இடைத்தேர்தலை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 236 துப்பாக்கிகள், உரிமதாரர்களிடம் இருந்து பெறப்பட்டு போலீஸ் ஸ்டேஷன்களில் பாதுகாப்பாக வைக்கப்படும்.
துப்பாக்கி உரிமதாரர்களிடம் துப்பாக்கியை ஒப்படைக்க அறிவுறுத்தி வருகிறோம். போலீஸ் ஸ்டேஷன்கள், ஆயுதப்படை ஆகியவற்றில் ஒப்படைக்க வேண்டும். இதேபோல் தேர்தல் பறக்கும் படைக்கு தினமும் மூன்று குழுவுக்கு மூன்று போலீசார் அனுப்பி வைக்கப்படுவர். இவ்வாறு கூறினர்.

Advertisement