இரண்டு நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி
• வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான நேற்று, சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன. தொடர்ச்சியாக இரண்டு வர்த்தக நாட்கள், சந்தை கண்ட சரிவுக்கு முற்றுப்புள்ளி விழுந்தது
• உலகளாவிய சந்தைப் போக்குகளின் தொடர்ச்சியாக, நேற்று சந்தை ஆரம்பித்த போதே குறியீடுகள் உயர்வுடன் துவங்கின. பிறகு, மூன்றாம் காலாண்டு முடிவுகள் குறித்த எதிர்பார்ப்புகள், அன்னிய முதலீட்டாளர்களின் தொடர் வெளியேற்றம் காரணமாக சிறிது நேரத்தில் சந்தைகள் இறக்கம் கண்டன ஓ.என்.ஜி.சி., ரிலையன்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ.,வங்கி உள்ளிட்ட முன்னணி நிறுவன பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டியதால், சந்தை குறியீடுகள் உயர்வுடன் நிறைவடைந்தன
• நிப்டியை பொறுத்தவரை தகவல் தொழில்நுட்பம் தவிர்த்து, அனைத்து துறைகளின் குறியீடுகளும் உயர்வு கண்டன. அதிகபட்சமாக, எண்ணெய் மற்றும் எரிவாயு, ஊடகம், எனர்ஜி மற்றும் உலோகம் உள்ளிட்ட துறைகளின் குறியீடுகள் 1.25 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தன.
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் நேற்று 1,491 கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்கி இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.12 சதவீதம் குறைந்து,
76.21 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 பைசா குறைந்து, 85.74 ரூபாயாக இருந்தது.
டாப் 5 நிப்டி 50 பங்குகள்
அதிக ஏற்றம் கண்டவை
ஓ.என்.ஜி.சி.,
எஸ்.பி.ஐ.,லைப்
எச்.டி.எப்.சி., லைப்
டாடா மோட்டார்ஸ்
அதானி என்டர்பிரைசஸ்
அதிக இறக்கம் கண்டவை
டிரென்ட்
எச்.சி.எல்., டெக்
டி.சி.எஸ்.,
ஐச்சர் மோட்டார்ஸ்
டெக் மஹிந்திரா