வைகுண்ட ஏகாதசிக்கு லட்டு தயாரிக்கும் பணி



வைகுண்ட ஏகாதசிக்கு லட்டு தயாரிக்கும் பணி


தர்மபுரி, :பெருமாள் கோவில்களில், வரும், 10ல் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நடக்க உள்ளது. அதையொட்டி, தர்மபுரி வரமஹாலட்சுமி உடனாகிய பரவாசுதேவ சுவாமி கோவிலில், அன்றைய தினம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட உள்ளது. இதற்காக, லட்டு தயாரிக்கும் பணி, கோவில் வளாகத்தில் நேற்று, 40 பணியாளர்களை கொண்டு நடந்து வருகிறது. லட்டு தயாரிக்க, 450 கிலோ கடலை மாவு, 400 கிலோ சர்க்கரை, பாதாம், முந்திரி தலா, 80 கிலோ, 45 லிட்டர் எண்ணெய் கொண்டு, 35,000 லட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்பணியை, கோவில் லட்டு பிரசாத குழு மற்றும் திருத்தேர் திருப்பணி குழு உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.
* விஜய் வித்யாலயா கல்லுாரி மாணவியர், கோவில் வளாகத்தை துாய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதை கல்லுாரி பேராசிரியர்கள்
ஒருங்கிணைத்தனர்.

Advertisement