தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்




ஓசூர்,:தமிழக கவர்னர் ரவியை கண்டித்து, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தி.மு.க., சார்பில், ஓசூர் ராம்நகரில் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் தலைமை வகித்தார். ஓசூர் மாநகர செயலாளர் மேயர் சத்யா, முன்னாள் எம்.எல்.ஏ., முருகன் முன்னிலை வகித்தனர். இதில், துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா, சிறுபான்மை நல உரிமை பிரிவு மாநில துணை செயலாளர் விஜயகுமார், இளைஞரணி மாநில துணை செயலாளர் சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
* தர்மபுரி, டவுன் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட, தி.மு.க., செயலாளர்கள் கிழக்கு தடங்கம் சுப்ரமணி, மேற்கு பழனியப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., மணி முன்னிலை வகித்தார். நகர செயலாளர் நாட்டான்மாது வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் இன்பசேகரன், மனோகரன், வெங்கடாசலம், மாநில நிர்வாகிகள் தர்மச்செல்வன், சத்தியமூர்த்தி, செந்தில்குமார் உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement