கடை உரிமையாளருக்கு கத்திக்குத்துதொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை




தேன்கனிக்கோட்டை, :தேன்கனிக்கோட்டையில், பழைய இரும்பு பொருட்கள் கடை உரிமையாளரை, கத்தியால் குத்திய தொழிலாளிக்கு, 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி, நேற்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கர்நாடகா மாநிலம், பெங்களூரு பி.டி.எம்., லே அவுட்டை சேர்ந்தவர் ரமேஷ், 46. பழைய பொருட்கள் வாங்கி விற்கும் கடை வைத்துள்ளார். கடந்த, 2022 பிப்., 6 ல், உறவினரை பார்க்க தேன்கனிக்கோட்டை வந்தார். அங்கு உழவர் சந்தைக்கு அவர் சென்றபோது, கோட்டை வாசல் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சீனிவாசன், 40, அவரிடம் தகராறு செய்து, வயிற்றில் கத்தியால் குத்தினார். அவரை, தேன்கனிக்கோட்டை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு, தேன்கனிக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி அரிஹரன், குற்றம் சாட்டப்பட்ட சீனிவாசனுக்கு, 7 ஆண்டுகள் சிறை தண்டனை, 10,000 ரூபாய் அபராதம், கட்ட தவறினால் மேலும், 3 மாத சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் ரவீந்திரநாத்
ஆஜராகினார்.

Advertisement