பாலீஷ் செய்வதாக கூறிநகை பறித்த இருவர் கைது
பாலீஷ் செய்வதாக கூறிநகை பறித்த இருவர் கைது
காரிமங்கலம்,: காரிமங்கலம் அடுத்த, கெரகோடஹள்ளி பஞ்., உட்பட்ட பெரிய மிட்டஹள்ளியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பெருமா, 45. இவர் நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு வீட்டிலிருந்தபோது, அங்கு வந்த இருவர், குறைந்த செலவில், தங்க நகைகளுக்கு பாலீஷ் போட்டு தருவதாக கூறியதுடன், கையில் வைத்திருந்த ஒரு பொருளை பெருமா மீது தடவினர்.
இதில், பெருமா மயக்கமடைந்தவுடன், அவரது அரை பவுன் தோடு, ஒரு கிராம் மூக்குத்தி, வெள்ளி கொலுசு ஆகியவற்றை பறித்து சென்றனர். பெருமா புகார் படி, காரிமங்கலம் போலீசார் நகை பறிப்பில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர். இந்நிலையில், திருச்சி மாவட்டம், அரங்கூரை சேர்ந்த ராஜ், 56, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை சேர்ந்த சின்னசாமி, 30, ஆகிய இருவரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement