மானாவாரி நிலத்தில்சோளக்கதிர் விளைச்சல்



மானாவாரி நிலத்தில்சோளக்கதிர் விளைச்சல்

கிருஷ்ணராயபுரம், : கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சேங்கல், சின்னசேங்கல், கரட்டுப்பட்டி, பஞ்சப்பட்டி, லட்சுமணம் பட்டி, புதுப்பட்டி, கணக்கம்பட்டி, அந்தரப்பட்டி, வயலுார், சரவணபுரம், நடுப்பட்டி, ஆகிய பகுதிகளில் விவசாயிகள் மானாவாரி நிலங்களில் சோளப் பயிரை சாகுபடி செய்துள்ளனர். சோளப் பயிர்கள் மழை நீரால் செழிப்பாக வளர்ந்துள்ளது. மேலும் மானாவாரி சோளம் கால்நடைகளுக்கு அதிகமாக பயன்படுத்தப்படுவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தாண்டு ஓரளவு மகசூல் கிடைக்கும் என, விவசாயிகள் கூறினர்.

Advertisement