மாநகராட்சியுடன் இணைக்கும் முடிவுக்குவரவேற்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு
மாநகராட்சியுடன் இணைக்கும் முடிவுக்குவரவேற்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு
கரூர் :கரூர் மாநகராட்சியுடன், ஆண்டாங்கோவில் கிழக்கு பஞ்சாயத்தை இணைக்கும் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்து, தி.மு.க., கரூர் தான்தோன்றிமலை மேற்கு ஒன்றிய செயலாளர் பாஸ்கர் தலைமையில், கரூர் கலெக்டர் தங்கவேலுவிடம் மனு அளித்தனர். அதில், கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்தில், ஆண்டாங்கோவில் கிழக்கு பஞ்சாயத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும், மக்களின் அத்தியாவசிய தேவைகளை கருத்தில் கொண்டு, பஞ்சாயத்து பகுதியை கரூர் மாநகராட்சியில் இணைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் காவிரி குடிநீர் கிடைக்கும், வீட்டு குப்பைகளை தினசரி காலையில் வந்து துாய்மை பணியாளர்கள் மூலம் அகற்றவும், கழிவுநீர் வெளியேறும் வகையில் பாதாள சாக்கடை இணைப்பு உள்பட பல்வேறு வசதிகள் கிடைக்கும். சாமானிய மக்கள் கூலி வேலைக்கு சென்று வரும் வகையில் டவுன் பஸ், ஷேர் ஆட்டோ, ஆட்டோ வசதி கிடைக்கும். எனவே, மாநகராட்சியுடன் இணைக்கும் முடிவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.