அரவக்குறிச்சியில் பனிப்பொழிவுஇயல்பு வாழ்க்கை பாதிப்பு



அரவக்குறிச்சியில் பனிப்பொழிவுஇயல்பு வாழ்க்கை பாதிப்பு

அரவக்குறிச்சி,:அரவக்குறிச்சியில், வழக்கத்திற்கு மாறாக பனிப்பொழிவு காணப்படுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், தொடர் மழை காரணமாக வழக்கத்தை விட இந்தாண்டு கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அதிகாலை நேரத்தில், பனி அதிகரித்து காணப்படுகிறது. மேலும் அந்த பனி, காலை 8:00 மணி வரை நீடிக்கிறது. மேலும், குளிர்ச்சியான சூழ்நிலையே நிலவி வருகிறது. பனிப்பொழிவால் வாகனங்களை நிறுத்திவிட்டு காலை, 8:00 மணிக்கு மேல் பனிமூட்டம் அகன்ற பின், எடுத்து செல்கின்றனர். கடந்த ஒரு வாரமாக, அரவக்குறிச்சியில் கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement