கரூரில் ஏ.ஐ.சி.சி.டி.யு., கண்டன ஆர்ப்பாட்டம்


கரூர்,
அகில இந்திய தொழிற்சங்க மையம், கரூர் மாவட்ட கிளை சார்பில் (ஏ.ஐ.சி.சி.டி.யு.,) வெண்ணை மலை தொழிலாளர் நல அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, பொங்கல் போனஸ், 15 ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தலைவர் செந்தில் குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement