மாநில கலைத்திருவிழா; ஜெய்வாபாய் பள்ளி முதலிடம்

திருப்பூர்; மாநில கலைத்திருவிழாவில் முதலிடம் பெற்ற மாணவியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நாமக்கல், கே.எஸ்.ஆர்., இன்ஸ்டியூட்டில், மேல்நிலைப்பள்ளி மாணவியருக்கான மாநில கலைத்திருவிழா நடந்தது. மாநிலம் முழுதும் இருந்து பல்வேறு மாணவியர் பங்கேற்ற இப்போட்டியில், திருப்பூர், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவியர் தனலட்சுமி, இந்துமதி, துர்காதேவி, அர்ச்சனா, தீபிகா, தாரணி ஆகியோர் பிறவகை குழு நடன பிரிவில் பங்கேற்றனர்.

'வான்முகில்' - 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' எனும் தலைப்பில் இவர்கள் நடனம் பார்வையாளர்களை கவர்ந்தது. மாணவியர் மாநில கலைத்திருவிழா முதலிடம் பெற்று அசத்தினர். மாநில போட்டியில் முதலிடம் பெற்ற மாணவியர் மற்றும் மாநில போட்டிக்கு மாணவியரை தயார்படுத்திய ஆசிரியர்கள் அங்கையற்கண்ணி, விண்ணரசி, விஜய், கிருத்திகா உள்ளிட்டோரை, பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா அமலோற்பவமேரி, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், சக ஆசிரியர் பாராட்டினர்.

Advertisement