ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழா அமர்க்களம்

அனுப்பர்பாளையம்; அம்மாபாளையம் ஸ்ரீமாகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

திருப்பூர், அவிநாசி ரோடு அம்மாபாளையத்தில்உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ காமாட்சி அம்மன், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ கருப்பராயர், கோவில் பொங்கல் விழா கடந்த டிச 31ல் துவங்கியது. நேற்று மாவிளக்கு மற்றும் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். தொடர்ந்து பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். மாலை 4 :00 மணிக்கு தேர்த்திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.

பொங்கல் விழாவில், இன்று மதியம் 12:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. இரவு பல்சுவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Advertisement