கிட்ஸ் கிளப் பள்ளியில் கலை கண்காட்சி அசத்தல் 

திருப்பூர்; திருப்பூர் கிட்ஸ் கிளப் இன்டர்நேஷனல் பள்ளியில் வர்ண விழுதுகள் எனும் தலைப்பில், கலைக் கண்காட்சி நிகழ்ச்சி நடந்தது. 'பிரிகேஜி' முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், கலை உணர்வு, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி படைப்புகளை சமர்பித்திருந்தனர்.

செய்தித்தாள் ஓவியம், நாடகக் கலைஞர்களின் ஓவியம், ஆன்மீகம், மண்டலா ஓவியம், மண்பானை ஓவியம், சிறு கற்களில் ஓவியம், அக்கால பெண்களின் ஓவியம், கண்ணாடி பாட்டில் ஓவியம், வண்ண நுால்களை பயன்படுத்தி எம்ப்ராய்டரி ஓவியம், ஜல்லிக்கட்டு, கற்காலச் சிற்பங்களின் ஓவியம், களிமண் கூலாங்கற்கள் மற்றும் இலைகளை வைத்து உருவாக்கப்பட்ட கைவினைப் பொருட்கள், பழங்கால வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்ட பிரமாண்டமான ஓவியம் உள்ளிட்டவற்றை காட்சிப்படுத்தியிருந்தனர்.

முன்னதாக, ஓவியக் கண்காட்சியினை கிட்ஸ் கிளப் கல்வி குழுமங்களின் சேர்மன் மோகன்கார்த்திக், பள்ளி முதல்வர் நிவேதிகா திறந்து வைத்தனர். பள்ளியின் துணை முதல்வர் சுமையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement