ஜெயந்தி மெட்ரிக் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா

திருப்பூர்; அருள்புரம், ஜெயந்தி மெட்ரிக் பள்ளியில் ஆண்டு விளையாட்டு போட்டி நடைபெற்றது.

திருப்பூர், அருள்புரத்தில் உள்ள ஜெயந்தி மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு போட்டி நடந்தது. ஜெயந்தி கல்வி நிறுவனங்களின் தாளாளர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பல்லடம் தாசில்தார் ஜீவா மற்றும் நேஷனல் சைக்கிளிஸ்ட் வினுவிகாசினி பங்கேற்றனர். பள்ளி செயலாளர் கவிதா, பள்ளி முதல்வர் முருகானந்தன் முன்னிலையில் போட்டி நடந்தது.

தடகளம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. 14 வயது பிரிவில் நவநீதகிருஷ்ணன், ரிதன்யா, 19 வயது பரிவில் செல்வன், ஜனனி வென்றனர். மாணவர்களுக்கான ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை அக்னி அணியினரும், மாணவிகள் பிரிவில் வாயு மற்றும் வருணா அணியினரும் வென்றனர்.

Advertisement