பொங்கல் பண்டிகைக்கு 1180 சிறப்பு பேருந்துகள்
மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.,14ல் பொதுமக்களின் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் அரசுப் போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிட் மூலம் வழக்கமான வழித்தட பேருந்துகளும் மற்றும் சிறப்பு பேருந்துகளும் பொங்கல் பண்டிகைக்கு முன்பு நாளை (ஜன.,10) முதல் ஜன.,13 வரை 455 பேருந்துகளும் மற்றும் பண்டிகைக்கு பின்பு ஜன.,14 முதல் ஜன.,19 வரை 725 பேருந்துகளும் மதுரை, திண்டுக்கல் தேனி, பழனி, விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம், ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து திருச்சி, திருப்பூர், கோவை, திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்செந்தூர், கம்பம், குமுளி மற்றும் சென்னை போன்ற முக்கிய ஊர்களுக்கு பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இப்போக்குவரத்துக் கழகம் மூலம் https://www.tnstc.in , TNSTC Mobile App மற்றும் இணைய சேவை மையம் வழியாக 32 Deluxe பேருந்துகளின் முன்பதிவு செய்யலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ''பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டும் பயணிகள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வதற்கும் ஏதுவாக பயணிகளுக்கு வழிகாட்டவும் சிறப்பு பேருந்துகளை கண்காணிக்கவும் முக்கிய பேருந்து நிலையங்களில் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்'' என மேலாண் இயக்குனர் சிங்காரவேலு தெரிவித்துள்ளார்.