அரையிறுதியில் மாயா ரேவதி

புதுடில்லி: ஐ.டி.எப்., டென்னிஸ் அரையிறுதிக்கு இந்தியாவின் மாயா ரேவதி முன்னேறினார்.
டில்லியில் ஜூனியர் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் 15 வயது வீராங்கனை மாயா ரேவதி பங்கேற்கிறார். கோவையை சேர்ந்த ரேவதி, நேற்று நடந்த காலிறுதியில், இத்தொடரின் 'நம்பர்-7' வீராங்கனை ரஷ்யாவின் ராடா ஜொலோட்டரேவாவை சந்தித்தார்.
முதல் செட்டை 6-3 என வென்றார் ரேவதி. அடுத்த செட்டில் 1-0 என முன்னிலை பெற்றார். மறுபக்கம் ராடா காயம் காரணமாக விலகினார். இதையடுத்து மாயா ரேவதி, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட, அரையிறுதிக்கு முன்னேறினார்.
இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ரேவதி, பிரான்சின் மார்கட் ஜோடி, 3-6, 4-6 என பல்கேரியாவின் யோவானா, ரஷ்யாவின் ராடா ஜொலோட்டரேவா ஜோடியிடம் தோற்றது.

Advertisement