பெரியார் குறித்து அவதூறு; விருதுநகரில் சீமான் மீது வழக்கு

விருதுநகர்"நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று முன்தினம் (ஜன. 8) செய்தியாளர் சந்திப்பில் பெரியார் எந்த இடத்திலும் தெரிவிக்காத கருத்தை, அவரின் நன்மதிப்பை குலைக்கும் வகையில் ஆதாரமின்றி பொய்யான செய்தியை தெரிவித்துள்ளார்.


சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிடர் கழக தலைமை பொதுக்குழு உறுப்பினர் புகழேந்தி விருதுநகர் கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிந்தனர்.

Advertisement