மதுரை-செங்கோட்டை ரயிலை கூடுதல் டிரிப் இயக்க வேண்டும்

ஸ்ரீவில்லிபுத்துார்: தைப்பொங்கல் கூட்ட நெரிசலைதவிர்க்க மதுரை- செங்கோட்டை பாசஞ்சர் ரயிலை மீண்டும் மதுரையில் இரவு 8:00 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை சென்று திரும்பும் வகையில் கூடுதல் டிரிப்புகள் இயக்க வேண்டுமென மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தற்போது தினமும் காலை 7: 25 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு செங்கோட்டை காலை 10:35 மணிக்கு வந்தடையும் ரயில், பின்னர் மதியம் 12:45 மணிக்கு செங்கோட்டையிலிருந்து புறப்பட்டு மாலை 4:00 மணிக்கு மதுரை சென்றடைகிறது. அதன் பின்பு இந்த ரயில் மறுநாள் காலையில் தான் செங்கோட்டைக்கு இயக்கப்படுகிறது.

இந்நிலையில் தைப்பொங்கல் கூட்ட நெரிசலை தவிர்க்க மதுரையில் இரவு 8:00 மணிக்கு புறப்பட்டு 11:15 மணிக்கு செங்கோட்டை சென்றடைந்து மறு மார்க்கத்தில் அதிகாலை 3:30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு காலை 6:45 மணிக்கு

மதுரை வந்தடையும் வகையில் இயக்கினால் தைப்பொங்கல் கூட்ட நெரிசலை தவிர்த்து மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்ட மக்கள் பயனடைவார்கள்.

எனவே, மதுரை- செங்கோட்டை வழித்தடத்தில் கூடுதல் டிரிப் ரயில் இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement