உக்ரைன் மோதல் குறித்து டிரம்ப்புடன் பேச புடின் தயார்

2


மாஸ்கோ: உக்ரைன் மோதல் விவகாரம் குறித்து, அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பேச ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தயாராக உள்ளதாக கிரெம்ளின் மாளிகை கூறியுள்ளது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் வரும் 20ம் தேதி பதவியேற்க உள்ளார். அவர் துவக்கம் முதலே, ரஷ்யா - உக்ரைன் இடையிலான மோதலுக்கு முடிவு கட்டுவேன் எனக் கூறி வந்தார்.

நேற்று டிரம்ப் அளித்த பேட்டி ஒன்றில், புடின் என்னை சந்திக்க விரும்புகிறார். இதனை அவர் பொது வெளியிலும் கூறி வந்துள்ளார். அதற்கு ஏற்பாடு தயாராகி வருகிறது எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் அதிகாரிகள் கூறியதாவது: அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்திப்பதற்கு புடின் எப்போதும் தயாராக உள்ளார். டிரம்ப் உள்ளிட்ட எந்த சர்வதேச தலைவரையும் சந்திக்க தயாராக இருப்பதாக அவர் ஏற்கனவே கூறியுள்ளார். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு ஏற்படுத்தப்படும் டிரம்ப்பின் முடிவு வரவேற்கத்தக்கது. இந்த சந்திப்புக்கு என எந்த நிபந்தனையும் இல்லை. பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளைத் தீர்க்க பரஸ்பர விருப்பமும் அரசியல் விருப்பமும் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement