இந்திய பெண்கள் அணி வெற்றி: பிரதிகா, தேஜல் அரைசதம்
ராஜ்கோட்: அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.
இந்தியா வந்துள்ள அயர்லாந்து பெண்கள் அணி, 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ராஜ்கோட்டில் நடந்தது. 'டாஸ்' வென்ற அயர்லாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அயர்லாந்து அணிக்கு லியா (59) ரன், கேபி (92) கைகொடுத்தனர். ஆர்லின் 28 ரன் எடுத்தார். 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 238 ரன் எடுத்தது. இந்தியா சார்பில் பிரியா அதிகபட்சம் 2 விக்கெட் சாய்த்தார்.
எளிய இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. மந்தனா 29 பந்தில் 41 ரன் எடுத்தார். ஹர்லீன் 20, ஜெமிமா 9 ரன்னில் அவுட்டாகினார். பிரதிகா அரைசதம் அடித்தார். 4வது விக்கெட்டுக்கு 116 ரன் சேர்த்த போது, பிரதிகா (89) அவுட்டானார். இந்தியா 34.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 241 ரன் எடுத்து வெற்றி பெற்றது. தேஜல் (53), ரிச்சா (2) அவுட்டாகாமல் இருந்தனர்.
41 ரன் எடுத்த மந்தனா, ஒருநாள் அரங்கில் 4000 ரன் என்ற மைல்கல்லை எட்டிய இரண்டாவது இந்திய வீராங்கனை ஆனார். இவர், 95 போட்டியில் 4001 ரன் எடுத்துள்ளார். முதலிடத்தில் மிதாலி ராஜ் (232ல் 7805 ரன்) முதலிடத்தில் உள்ளார்.