பைக்குகள் மோதல் வாலிபர் சாவு

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள நெய்வாசல் கொத்தங்குடியை சேர்ந்தவர் கான்டிபன், 30; இவர் நேற்று முன்தினம் இரவு 10.00 மணியளவில் வீராணம் ஏரிக்கரையில் பரிபூரணநத்தம் அருகே பைக்கில் சென்றார்.

அப்போது காட்டுமன்னார்கோவிலிருந்து வந்த மற்றொரு பைக் மோதியது. விபத்தில் கான்டிபன் தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

தகவல் அறிந்துவந்த ஒரத்துார் போலீசார் கான்டிபன் உடலை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், எதிரில் மோதி விபத்தில் சிக்கிய வடலுாரை சேர்ந்த ராஜமோகன், 40; பு.உடையூர் வீரமணி(42), ஆகியோர் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து குறித்து ஒரத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement