ஊழியர் தாக்கு: 4பேர் கைது
கடலுார் : கடலுாரில் தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார், வில்வநகரை சேர்ந்தவர் விஜயபிரதாப்,25, தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு, கடலுார் அரசு மருத்துவமனை எதிரே நிறுத்தப்பட்டிருந்த தனது பைக்கை எடுக்க வந்தார்.
அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த வாலிபர்களுக்கும், விஜயபிரதாப்பிற்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டு, மோதலானது.
இதில் விஜயபிரதாப்பை, அந்த கும்பல் கடுமையாக தாக்கியது. காயமடைந்த விஜயபிரதாப், கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
புகாரின் பேரில் கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து, தேவனாம்பட்டினத்தை சேர்ந்த ஆகாஷ், 21, முதுநகரை சேர்ந்த ஹரிஷ்குமார்,19, மற்றும் 17, 16 வயதுடைய இரண்டு பேர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement