காட்டேரி நீர் வீழ்ச்சிசுற்றுலா பயணிகள் ரசிப்பு; ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணியர் ரசிப்பு
ஊட்டி : காட்டேரி தடுப்பணையிலிருந்து கொட்டும் நீர்வீழ்ச்சியின் ரம்மிய காட்சியை சுற்றுலா பயணியர் ரசித்து செல்கின்றனர்.
குன்னுார் காட்டேரியிலிருந்து கெந்தளா காட்டேரி தடுப்பணை, கேத்தி பாலாடா வழியாக ஊட்டி காந்தி பேட்டையை இணைக்கும் வகையில் சமீபத்தில், மாநில நெடுஞ்சாலை துறை சார்பில், 40 கோடி ரூபாயில் சாலை சீரமைக்கப்பட்டது. இச்சாலை சீரமைப்பு பணி முடிந்ததை அடுத்து, இயற்கை காட்சிகளை ரசிக்க சுற்றுலா வாகனங்கள் அதிகளவில் இச்சாலையில் சென்று வருகிறது.
இந்நிலையில், காட்டேரி தடுப்பணையை ஆக்கிரமித்த ஆகாய தாமரை நவீன இயந்திரம் உதவியுடன் அகற்றப்பட்டது. தடுப்பணையில் முழு கொள்ளளவில் தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளது.
தற்போது, தடுப்பணையிலிருந்து வெளியேறும் தண்ணீர் நீர்வீழ்ச்சியாக கொட்டும் ரம்மிய காட்சியை அவ்வழியாக பயணிக்கும் சுற்றுலா பயணியர் வாகனத்தை நிறுத்தி ரசித்த்து 'போட்டோ' எடுத்து செல்கின்றனர்.