உள்ளம் உருகுதைய்யா முருகா... உந்தன் உருவம் காண்கையிலே!

உள்ளங்கைக்குள் தவழும் இந்த கியூட் முருகனைக் கண்டால், உள்ளம் உருகிப்போகும், அள்ளி அணைத்திடவே ஆசை பெருகிவிடும்.

பூம்புகார் விற்பனையகத்தில், ஒரு இன்ச் அளவில் புதிதாக வந்துள்ள, குட்டி முருகர் வெண்கலச் சிலைகளை பார்த்தவுடனே வாங்க வேண்டும் என்ற ஆசை வந்துவிடும்.

முருக பக்தர்களை ஈர்க்க, இங்கு குழந்தை முருகர், ஆறுதிருமுகத்துடன், ராஜ அலங்கா ரம், தோகை விரித்த மயிலுடன், வள்ளி தெய்வானையுடன் தம்பதி சகிதமாய், என வித, விதமான முருகர் சிலைகள் உள்ளன.

இதேபோல், தனியாக வேல், ஓம் மந்திரத்துடன் வேல், விளக்குடன் இணைந்த வேல் என வெவ்வேறு வடிவங்களிலும், அளவுகளிலும் வேல்கள் உள்ளன.

கார் போன்ற வாகனங்களில், வைப்பதற்கேற்ப நுண்ணிய வேலைப்பாடுடன் தனித்துவமான முருகர் சிலைகள் மற்றும் வேல்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பூம்புகார் விற்பனை மேலாளர் மாலதி கூறுகையில், ''வெண்கலம், பஞ்சலோகம், மார்பிள் டெஸ்ட், மரம், கல், ரேடியண்ட் என வித,விதமான முருகர் சிலைகள் உள்ளன. தை முதல் பங்குனி மாதம் வரை, முருக வழிபாட்டு காலத்தில் பக்தர்கள் ஏராளமானோர் வருகின்றனர். இந்த சமயத்தில் முருகர் சிலைகளுக்கும், வேல்களுக்கும் நல்ல வரவேற்பிருக்கும்,'' என்றார்.

Advertisement