விஷம் வைத்து புறாக்களை கொன்ற மர்ம நபருக்கு போலீஸ் வலை
சங்கராபுரம் : விஷம் கலந்த அரிசியை வைத்து 50க்கும் மேற்பட்ட புறாக்களை கொன்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த ஊராங்காணி காட்டுகொட்டகையை சேர்ந்தவர் துரைராஜ். நிலத்திலேயே வீடு கட்டி வசித்து வருகிறார். பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் சென்ற துரைராஜ் நேற்று முன்தினம் மாலை காட்டுக்கொட்டகையில் நிலத்தில் உள்ள வீட்டிற்கு சென்றார்.
அப்போது, வீட்டில் வளர்த்து வந்த 50க்கும் மேற்பட்ட புறாக்கள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இவர் ஊருக்கு சென்ற சமயத்தில் யாரோ மர்ம நபர் விஷம் கலந்த அரிசியை துாவி புறாக்களை கொன்றுள்ளது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விஷம் கலந்த அரிசியை துாவி புறாக்களை கொன்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement